“என்ன நம்பி வாடி, உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்”… 17 வயது சிறுமிக்கு instagram-ல் காதல் வலை… இறுதியில் வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்…!

Spread the love

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார் என்பவருடைய மகன் விஷ்வா (20). கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு instagram மூலமாக புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த தானாம்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறிய விஷ்வா தன்னுடைய கிராமத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி சிறுமி விஷ்வாவின் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அங்குள்ள கோவிலில் வைத்து விஷ்வா சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிறுமி மாயமானது தொடர்பாக அவருடைய பெற்றோர் தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சிறுமியை விஷ்வா அழைத்துச் சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் விஷ்வாவை கைது செய்தனர். சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். தற்போது விஷ்வாவை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

9 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

9 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

9 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

9 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

9 மணத்தியாலங்கள் ago