விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள களத்திக்குளம் பகுதியை சேர்ந்த முனியாண்டி (24) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஏற்கனவே திருமணம் ஆன இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதனிடையே மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் நாளடைவில் செல்போன் உரையாடலாக மாறி உள்ளது.
இருவரும் மாறி மாறி செல்போனில் பேசி வந்த நிலையில் அடிக்கடி தொடர்பிலிருந்துள்ளனர். இதனிடையே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு முனியாண்டி திருமங்கலம் பேருந்து நிலையத்திற்கு வருமாறு சிறுமியை அழைத்துள்ளார். சிறுமியும் அவருடைய பேச்சை நம்பி அங்கு சென்ற நிலையில் சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி அழைத்துச் சென்ற முனியாண்டி திருமணம் செய்து கொண்டதாக கூறி தனியாக வாழ்ந்து வந்ததாக தகவல் வெளியாகின.
இதனிடையே சிறுமி வீட்டிலிருந்தே திடீரென்று மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை பத்திரமாக மீட்டுனர். தொடர்ந்து சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக கூறப்படும் முனியாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…