ஐயோ கடவுளே… என்ன இது?… வாக்குச்சாவடி பக்கம் தலைவச்சுக்கூட படுக்கக்கூடாது… YCP தலைவரை வீட்டிற்கு சென்று மிரட்டிய இன்ஸ்பெக்டர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

By Swetha on கார்த்திகை 1, 2026

Spread the love

திருப்பதி மாவட்டம், நாயுடுபேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட 14-வது வார்டில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரான சென்னா ரெட்டி கிஷோர் ரெட்டி வசித்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதியின் காவல் ஆய்வாளர் த்வாரக வெங்கடரமன தனது குழுவினருடன் திடீரென கிஷோர் ரெட்டியின் இல்லத்திற்கு விரைந்து சென்று அவரை நேரில் சந்தித்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

காவல் ஆய்வாளர் கிஷோர் ரெட்டியின் வீட்டிற்குச் சென்று, நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மையங்களின் பக்கம் அவர் வரக்கூடாது என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நேரடியாகவே எச்சரித்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

https://twitter.com/Telugufeedsite/status/2116771409020203212/video/1

   

வாக்குப்பதிவு மையங்களுக்கு வரவிடாமல் தடுத்து, அதிகாரத்தைப் பயன்படுத்தி போலீசார் இவ்வாறு மிரட்டல் விடுப்பது ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயல் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். காவல் ஆய்வாளரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.