தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் பிரபலம் காலமானார்… “சொல்லின் செல்வருக்கு” அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

By Soundarya on தை 9, 2026

Spread the love

தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இனியன் சம்பத்   இன்று   காலமானார். ‘சொல்லின் செல்வர்’ என்று போற்றப்படும் ஈ.வி.கே. சம்பத்தின் மகனும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் சகோதரருமான இவர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவராகப் பணியாற்றியவர். திமுக, காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய முக்கியக் கட்சிகளில் இயங்கிய அனுபவம் கொண்டவர்.

கடந்த 2026-ன் தொடக்கத்தில், அம்மா திமுக என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிப் பரபரப்பை ஏற்படுத்தினார். இருப்பினும், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.