நடிகர் சிலம்பரசன் இப்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆண்ட்ரியா யோகலட்சுமி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரத்தில் கோவில்பட்டியில் துவங்கியது. மலேசியாவில் இருந்து நேராக கோவில்பட்டிக்கு வந்த சிலம்பரசன் கடந்த ஒரு வாரமாக அரசன் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார்.
இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் நேற்று கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு கிளம்பி விட்டார். சிம்புவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கிளம்பி விட்டார் என்ற தகவல் வேகமாக பரவியது. ஆனால் உண்மையில் அவருக்கு வயிற்று வலி எதுவும் இல்லை என்றும் படப்பிடிப்பை முடித்துக்கொண்டே அவர் கிளம்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அரசன் படப்பிடிப்பை முதல் ஷெட்யூலை வருகிற டிசம்பர் 24ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், சிம்பு நடிக்க வேண்டிய காட்சிகள் 4 தினங்களுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. அதனால் அவர் சென்னைக்கு கிளம்பி சென்றிருக்கிறார். அடுத்தகட்ட படப்பிடிப்பு அதாவது 2வது ஷெட்யூல் ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு நடத்திக்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது.
