கல்யாணம் பண்ணி குழந்தையோடு வாழ ஆசைப்பட்ட சில்க்…! கனவைச் சிதைத்த ‘துரோகம்’…. நடிகை சொன்ன பகீர் தகவல்…!!

By Devi Ramu on சித்திரை 17, 2026

Spread the love

தென்னிந்தியத் திரையுலகில் 80-களில் கனவுக்கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் மறைவுக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்து புகழின் உச்சத்துக்கே சென்ற அவர், தனது உதவியாளராக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவரை அதிகம் நம்பியுள்ளார். ஆனால், அந்த நட்பு ஒருகட்டத்தில் ராதாகிருஷ்ணனின் மகனுக்கும் சில்க் ஸ்மிதாவுக்கும் இடையிலான காதலாக மாறியுள்ளது; அந்த இளைஞரை மணந்து ஒரு அழகான இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொள்ள சில்க் ஸ்மிதா ஆசைப்பட்டதாக நடிகை ஜெயசீலா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சில்க் ஸ்மிதாவின் இந்தத் திருமண விருப்பம் ராதாகிருஷ்ணனுக்குத் தெரிந்தபோது, அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பெரிய துரோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல ஆண்களால் ஏமாற்றப்பட்டு மன உளைச்சலில் இருந்த சில்க் ஸ்மிதாவுக்கு, தான் நேசித்த குடும்பமே தனக்கு எதிராக மாறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்பிற்காக ஏங்கித் தவித்த அவருக்குக் கிடைத்த இந்தத் தொடர் ஏமாற்றங்களும், நம்பிக்கைத் துரோகமுமே அவரைத் தற்கொலை என்ற விபரீத முடிவுக்குத் தள்ளியதாகத் திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.