நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் மதுர வீரன் சகாப்தம் படை தலைவன் ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது கொம்பு சீவி என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் பொன்ராம் இயக்கிய இந்த படம் வருகிற 19ம் தேதி ரிலீஸாக உள்ளது. கொம்பு சீவி படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் நடிகர் சண்முக பாண்டியன் பேசியதாவது, அப்பா இறந்த போது அவரது இறுதிச் சடங்குகள் நல்லடக்கம் அனைத்தையும் முடித்துவிட்டு நானும் அண்ணனும் அம்மாவும் வீட்டுக்கு வந்து ஒரு முக்கிய முடிவை எடுத்தோம்.
இனி என்ன ஆனாலும் சரி அப்பா எப்படி அன்னதானம் செய்து கொண்டிருந்தாரோ இதே போல் நாமும் எப்போதும் அன்னதானம் செய்ய வேண்டும். அதை நமது கடைசி காலம் வரையிலும் தொடர்ந்து செய்ய வேண்டும். நாளை நமது குழந்தைகள் வந்த பின்பும் அவர்களையும் இந்த அன்னதானத்தை தொடர்ந்து செய்யச் சொல்ல வேண்டும் என்று அன்று நாங்கள் முடிவெடுத்தோம் என்று நடிகர் சண்முகபாண்டியன் அந்நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.
