ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தில் நாயகியாக நடித்தவர் ருக்மணி வசந்த். எனினும் காந்தாரா சாப்டர் 1 படத்தில் ருக்மணி வசந்த் நடிப்பும் கேரக்டரும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ருக்மணி வசந்த் கூறியதாவது, பாலிவுட் படங்களில் எனக்கு எப்போதுமே மிகுந்த ஆர்வம் இருக்கிறது. சிறுவயதில் இருந்தே இந்தி எனக்கு பரிச்சயமான மொழியாக உள்ளது.
எனது குடும்பம் ராணுவ பின்னணியை கொண்டது. வெவ்வேறு கண்டோன்மென்ட்களுக்கு இடையே இணைக்கும் மொழியாக இந்தி உள்ளது. அதனால் தான் அந்த மொழியின் மீது எப்போதுமே எனக்கு ஒரு ஆர்வம் இருந்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை எனக்கு இந்தியில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த மொழியில் எனது திறமையை நிரூபிக்க நான் மிகவும் ஆவலாக உள்ளேன். கடவுளின் அருளால் இந்தியில் அந்தப் பயணம் விரைவில் தொடங்கும் என்று நம்புகிறேன் என்று அதில் ருக்மணி வசந்த் கூறியிருக்கிறார்.
