தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று இரவு 7:30 மணிக்கு கரூரில் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வந்தடைந்தார். 12 மணிக்கு அவர் வருவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உறவினர் கூறும்போது, எனது பெயர் அபிநயா. ஸ்ரீ விஜய் பேசிய இடத்திற்கு அருகே தான் நின்று கொண்டிருந்தோம். நாங்கள் விஜய்யை பார்க்கவில்லை. பார்ப்பதற்குள் எங்களை கீழே போட்டு தள்ளி விட்டார்கள். நாங்கள் கீழே விழுந்து காப்பாத்துங்க காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டோம். யாராலும் எங்களை காப்பாற்ற முடியல. எங்களால அங்கிருந்து வெளியே வர முடியல.
நாங்க எழுந்த பிறகு தான் எங்க பெரியம்மா மயக்கம் போட்டு விழுந்தது தெரியும். அதன் பிறகு 2,3 பேர் சேர்ந்து அவங்கள சாலைக்கு தூக்கிட்டு வந்து படுக்க வைத்தார்கள். போலீஸ்காரங்க கிட்ட சொன்னாலும் சரி சரின்னு சொல்லிட்டு போறாங்களே தவிர அவங்க எந்த உதவியும் பண்ணல. 2,3 பசங்க தான் ஆம்புலன்ஸ் கூட்டிட்டு வந்தாங்க. வேலுசாமிபுரத்திலிருந்து மருத்துவமனை வருவதற்கு ஆட்டோக்காரங்க 1500 ரூபாய் கேட்டாங்க. அந்த பணத்தை கொடுத்து மருத்துவமனைக்கு வந்தோம். அதுக்குள்ள எங்க பெரியம்மா இறந்துட்டாங்க என கூறியுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான ஆனந்தராஜ், தனது 22 வயது ஊழியர் கிரண் மற்றும் அவரது 19 வயது மகளைத் தனது…
கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…