மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ரிலீசான தக் லைப் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக மணிரத்தினம் நடிகர் துருவ் விக்ரம் மற்றும் சிம்புவை வைத்து படம் இயக்குவதற்காக 2 ஸ்கிரிப்ட் ரெடி செய்துள்ளார். ஆனால் துருவ் விக்ரம் அந்த படத்தில் நடிக்கப் போவதில்லை என கூறியதால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் அந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக மற்றொரு படத்தில் சிம்புவும் நடிக்கப் போவதில்லையாம். அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தான் அந்த படத்தில் நடிக்க போகிறார். மணிரத்தினம் விஜய் சேதுபதியை நேரில் சென்று பார்த்து கதையை கூறவில்லை. ஹைதராபாத்தில் இருக்கும் விஜய் சேதுபதியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது விஜய் சேதுபதி எப்போது வேண்டுமானாலும் நான் வருகிறேன். நீங்கள் படத்தின் வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க என கூறியதாக தெரிகிறது.
