இது புது டெக்னிக்கா இருக்கே…! வித்தியாசமான ஷவரை உருவாக்கி குளித்து மகிழும் சிறுவன்… இணையவாசிகளை கவர்ந்த வீடியோ…!!

By Soundarya on கார்த்திகை 13, 2025

Spread the love

ஒவ்வொரு நாளும், சமூக ஊடகங்களில் எண்ணற்ற வீடியோக்கள் வெளியாகி  நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சிந்திக்க வைக்கின்றன, சில  இதயத்தைத் தொடுகின்றன. சமீபத்தில் வெளிவந்த அத்தகைய ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது, அதில் ஒரு சிறுவன் தனது சொந்த முயற்சியால் பாலீதின் கவரின் தண்ணீரை நிரப்பி   புதிய ஷவரை உருவாக்கியுள்ளார்.

அந்த பாலீதின் கவரின் தண்ணீரை நிரப்பி மேலே தொங்கவிட்டுவிட்டு பின் சிறுவன் சோப்பு தடவி குளிக்கத் தயாரானவுடன், ஒரு குச்சியால் பாலிதீன் பையில் ஒரு சிறிய துளை போடுகிறார். இந்த சிறிய துளையிலிருந்து ஷவர் போல தண்ணீர் பாய்கிறது, சிறுவன் தண்ணீருக்கு அடியில் மகிழ்ச்சியுடன் குளிக்கிறான். இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.