குர்கானில் ரத்தப் பரிசோதனைக்காகச் சென்ற இளைஞரைத் திட்டமிட்டு மிரட்டி பணம் பறித்த இளம்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம்பெண், ரத்த மாதிரி (Blood Sample) எடுக்க வேண்டும் என்ற சாக்கில் இளைஞரைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அவர் வீட்டிற்குச் சென்றபோது, அந்தப் பெண் இளைஞருடன் கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளார்.
பின்னர், அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய அந்தப் பெண், இளைஞரிடமிருந்து பல லட்ச ரூபாயைப் பறித்துள்ளார். மிரட்டல் தாங்க முடியாத அந்த இளைஞர், இறுதியில் தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்தி, அந்த இளம்பெண்ணின் இருப்பிடத்தைச் சோதனையிட்டனர்.
இந்தச் சோதனையின் போது, அந்தப் பெண்ணுடன் சேர்ந்து இந்தச் சதியில் ஈடுபட்ட மேலும் இரண்டு இளைஞர்களையும் போலீஸார் பிடித்துள்ளனர். இந்த கும்பல் திட்டமிட்டே இளைஞர்களைத் தேடிப் பிடித்து இது போன்ற “ஹனி ட்ராப்” (Honey Trap) வலைகளில் வீழ்த்திப் பணம் பறித்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது போலீஸார் அந்தப் பெண் மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…