ஏ.டி.ஆர்.,( ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்) என்ற அமைப்பு பணக்கார அமைச்சர்களை பற்றி ஆய்வு நடத்தியது இதற்காக 643 அமைச்சர்கள் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரபான பத்திரிக்கையை ஆய்வு செய்தது இதன் முடிவில் இந்தியாவின் டாப் 10 அமைச்சர்கள் பட்டியல் பின்வருமாறு..
சந்திரசேகர் பெம்மாசானி, தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரா:
- இவர் டாக்டர் மற்றும் இந்திய அரசியல்வாதி.
- இவர் ஜூன் 2024ம் ஆண்டு முதல், ஊரக வளர்ச்சி & தகவல் தொடர்பு துறைக்கான, 28வது மாநில அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
- இவரது சொத்து மதிப்பு ரூ. 5,705 கோடி.
டி.கே.சிவகுமார், கர்நாடகா துணை முதல்வர், காங்கிரஸ் :
- இவரது சொத்து மதிப்பு ரூ. 1,413 கோடி.
சந்திரபாபு நாயுடு, ஆந்திரா முதல்வர், தெலுங்கு தேசம் கட்சி :
- அதிக நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதல்வர்
- இப்பொழுது தெலுங்கு தேசக் கட்சியின் தலைவராக உள்ளார்.
- சொத்து மதிப்பு ரூ. 931 கோடி.
நாராயண பொங்குரு, தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரா:
- இந்திய கல்வியாளர்
- இவர் 2014ல் ஆந்திரப் பிரதேச சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
- தற்பொழுது நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகர்ப்புற வீட்டுவசதி அமைச்சராகப் பணியாற்றினார்.
- தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
- நாராயணா கல்வி நிறுவனக் குழுவை நிறுவினார்.
- சொத்து மதிப்பு ரூ. 824 கோடி.
பைரதி சுரேஷ் (காங்கிரஸ்), கர்நாடகா :
- கர்நாடக அரசில் கேபினட் அமைச்சராகவும், ஹெப்பால் எம்எல்ஏயாகவும் பணியாற்றி வருகிறார்
- சொத்து மதிப்பு ரூ. 648 கோடி.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் விவேகானந்த் :
- தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்
- சொத்து மதிப்பு ரூ. 606 கோடி.
நாரா லோகேஷ், தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரா
- தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் ஆவார்
- சொத்து மதிப்பு ரூ. 542 கோடி.
மங்கள் பிரபாத் லோதா , பாஜ, மஹாராஷ்டிரா :
- மஹாராஷ்டிராவின் திறன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்
- சொத்து மதிப்பு ரூ. 447 கோடி.
பொங்குலெட்டி சீனிவாச ரெட்டி, காங்கிரஸ், தெலுங்கானா :
- தெலுங்கானாவின் வருவாய், வீட்டுவசதி, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர்
- சொத்து மதிப்பு ரூ. 433 கோடி.
ஜோதிராதித்ய சிந்தியா, பாஜ, மத்திய அமைச்சர் :
- மத்திய தகவல் தொடர்பு அமைச்சர்
- சொத்து மதிப்பு ரூ. 424 கோடி.
