மக்களிடையே பொதுவாக ஒரு கூற்று இருக்கிறது. அவர்கள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே செல்கிறார்கள் ஏழைகள் மீண்டும் மீண்டும் கீழேதான் செல்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் யாரும் இருந்த இடத்தில் இருந்திருந்தால் எதுவுமே நடக்காது. பணக்காரர்கள் ஏன் மேலே செல்கிறார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் முதலீடு செய்கிறார்கள். தங்களது பணத்தை பன்மடங்காக பெருக்குவதற்கு என்ன செய்யலாம் என்ற திட்டத்தை வகுக்கிறார்கள். அப்படி இந்தியாவில் உள்ள பெரும்பாலான பணக்காரர்கள் ஒரு திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதை நீங்கள் தெரிந்து கொண்டு ஒருவேளை நீங்கள் முயற்சி செய்தால் நீங்களும் வாழ்வில் முன்னேறுவதற்கு பயன் உள்ளதாக இருக்கும். அதை பற்றி இனி காண்போம்.

Mutual Fund, SIP போன்றவை சமீபத்திய வருடங்களில் மிகவும் பிரபலமாக ஆகிக்கொண்டிருந்தது. அனைவரும் அதில் முதலீடு செய்வதை பார்த்திருப்போம். ஆனால் தற்போது அதைத் தாண்டி இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிகமாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளார்கள் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தில் மந்தமான சூழ்நிலை இருந்தாலும் ரியல் எஸ்டேட்டில் மக்களின் நம்பிக்கை வலுவாக இருக்கிறது.
கடந்த ஆண்டு 71% பணக்காரர்கள் ரியல் எஸ்டேட்டில் தங்களது பணத்தை முதலீடு செய்து இருக்கின்றனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 62% ஆகும். இருப்பினும் இந்த துறையில் முதலீடு செய்பவர்களின் விருப்பம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதன் மூலம் 12 முதல் 18 சதவீதம் வரை வருமானம் மற்றும் லாபம் பெறலாம் என்று கூறுகிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள் ரியல் எஸ்டேட்டில் தங்களது பணத்தை முதலீடு செய்யும் போது அது பன்மடங்காக பெருகும் என்று நம்புகிறார்கள். மேலும் இது ஒரு வலுமான நம்பகத்தமான முதலீட்டு முறையாக ரியல் எஸ்டேட் மாறப்படும் என்று அறிக்கை காட்டுகிறது. நீங்களும் உங்கள் பணத்தை சரியான திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் ரியல் எஸ்டேட் சிறந்த தேர்வாக இருக்கலாம். ஆனால் சரியான சொத்து மற்றும் டாக்குமெண்ட்களை தெரிவு செய்து முதலீடு செய்யும்போது நிச்சயம் லாபம் கிடைக்கும்.
