தமிழ் சினிமா ரொம்ப மோசமான நிலையில் இருக்கு.. விஜய் மல்லையா, அம்பானி எல்லாம் படம் எடுக்கலாமே.. நடிகர் விஷால் காட்டம்..!

By Nanthini on தை 30, 2025

Spread the love

சுந்தர் சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான திரைப்படம் தான் மதகஜராஜா. வழக்கமான சுந்தர் சி யின் காமெடி பாணியில் உருவான இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி 18 நாட்களுக்குப் பிறகு 52.45 கோடி ரூபாய் வசூல் ஈட்டி உள்ளது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் சென்னையில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். சைக்கிளில் கோவிலுக்கு சென்ற விஷால் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சைக்கிள் ஓட்டுவது நல்ல விஷயம்தானே. டிராபிக்கில் எல்லாம் புகுந்து சாமி பாக்குறதுக்கு போனேன். இப்போதும் சாமி பார்க்க போனேன்.

யார் என்ன சொன்னா எனக்கென்ன, 'ஐ டோன்ட் கேர்': விஷால் | I don't care: Says  Vishal - Tamil Filmibeat

   

கபாலீஸ்வரர் கோவிலுக்கு நான் ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதற்கேற்றது போல படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடி உள்ளது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆரம்பித்து விட்டேன். 12 வருடங்கள் கழித்து ஒரு படம் வந்து இவ்வளவு வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதனால் சாமிக்கு நன்றி சொல்லிட்டு போகலாம் என்று வந்தேன். நான் சிறிய பட்ஜெட் படங்கள் பற்றி பேசும்போது என்னை எல்லோரும் வில்லனாக பார்த்தாங்க. நான் திரும்பவும் சொல்றேன், ஒரு கோடியில் இருந்து நான்கு கோடி வரை படம் எடுக்கணும் என்று இருந்தால் இந்த வருஷமும் அடுத்த வருஷமும் வங்கியில் வைப்பு தொகையாக போடுங்க. இல்லையென்றால் நிலத்தை வாங்குங்கள். தமிழ் சினிமா துறை ரொம்ப மோசமான நிலையில் உள்ளது.

   

 

நான் ஓப்பனாக சொல்கிறேன் மத்தவங்க சொல்ல மாட்டாங்க. நல்ல பாதையில் கொண்டு செல்லும் நபர்களை நம்பி படம் எடுக்கலாம். காசு இருக்கவங்க எல்லாம் படம் எடுக்கலாம். ஏன் விஜய் மல்லையா மற்றும் அம்பானி எல்லாம் படம் எடுக்கலாமே. ஏன் எடுக்க மாட்றாங்க என்றால் அவங்களுக்கு புரியுது. ஏனென்றால் சினிமா இண்டஸ்ட்ரி என்பது உறுதியாக பலன் கிடைக்கும், உறுதியாக லாபம் கிடைக்கும் என்று எல்லாம் இல்லை. முக்கியமா சின்ன படங்களுக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. உற்சாகம் கொடுக்கும் சிறிய படங்களுக்கு உணர்வு கொடுங்க. சின்ன படங்கள் தான் வந்து பெப்சி தொழிலாளர்களுக்கு வாய்ப்பு தெரிகிறது. நாங்க எல்லாம் வருஷத்துக்கு மூன்று படம் இல்லை என்றால் இரண்டு படம்தான் நடிக்கிறோம். சின்ன படங்களை நம்பி 18 ஆயிரம் பேர் இருக்காங்க என்று விஷால் பேசியுள்ளார்.