“ஓ மை காட்… அமெரிக்காவில் அரங்கேறிய மளிகைக் கடையில்… தள்ளுபடி காய்கறிக்காக அடித்துக்கொண்ட இந்தியர்கள் – உலக அரங்கில் நாறிப்போன இந்தியாவின் மானம்..? நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!”

By Swetha on ஆடி 4, 2026

Spread the love

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய மளிகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவின் போது, தள்ளுபடி விலையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் முண்டியடித்துக் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த இரண்டு நிமிட வீடியோவில், முதியவர்கள் உட்பட ஏராளமான மக்கள் கூட்டம் நெரிசலான பாதைகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை அள்ளி நிரப்புவதும், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் “ஓ மை காட்” என்று கூறுவதும் பதிவாகியுள்ளது. இந்த அதிரடித் தள்ளுபடி விற்பனையால் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் இணையவாசிகள் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களையும் விவாதங்களையும் சந்தித்து வருகின்றன. சிலர் இந்த நடத்தை வருத்தமளிப்பதாகவும், வெளிநாடுகளில் இந்தியர்களைப் பற்றிய தவறான பிம்பத்தை இது உருவாக்குவதாகவும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், இத்தகைய ஒழுங்கற்ற செயல்பாடு வெட்கக்கேடானது என்றும், வெறும் கொத்தமல்லி மற்றும் மலிவு விலை பொருட்களுக்காக இப்படி அநாகரிகமாக நடந்துகொள்ளக் கூடாது என்றும் பல பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

   

அதே நேரத்தில், இந்தக் காட்சிகளை இந்தியாவின் பழைய காய்கறிச் சந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசிய பலருக்குப் பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. தற்போதைய இந்தியா இந்த நிலையிலிருந்து வெகுதூரம் முன்னேறிவிட்டதாகப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவில் இப்போது பிளின்கிட் , ஜெப்டோ, பிக் பாஸ்கெட் போன்ற விரைவு வணிகச் செயலிகளும், நவீன சூப்பர் மார்க்கெட்டுகளும் வந்துவிட்டதால் நடுத்தர மற்றும் கிராமப்புறங்களில் கூட மக்கள் மிகவும் ஒழுங்குமுறையுடன் பொருட்களை வாங்குவதாகவும், அங்கு வாழும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய பழைய இந்தியாவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.