இந்தியர்களுக்கு அடுத்த ஷாக்…. இனி 20,000 டாலர் கட்டினால் தான் B1, B2 விசாவா?…. டிரம்பின் புதிய விதியால் அதிர்ச்சி… பகீர் தகவல்….!

By Nanthini on ஆவணி 4, 2026

Spread the love

அமெரிக்காவிற்கு சுற்றுலா, மருத்துவ சிகிச்சை அல்லது வணிக நிமித்தமாகச் செல்லத் திட்டமிட்டுள்ள இந்தியர்களிடையே, B-1 மற்றும் B-2 விசாக்களுக்கு இனி 20,000 டாலர் (சுமார் ரூ.17.5 லட்சம்) வரை ‘விசா பாண்ட்’ டெபாசிட் கட்ட வேண்டும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறைகளை மீறி அமெரிக்காவில் தங்குவதைத் தடுப்பதற்காக, டிரம்ப் நிர்வாகத்தால் சோதனை முறையில் தொடங்கப்பட்ட இந்த பாதுகாப்பு வைப்புத் தொகைத் திட்டம், தற்போது 50 நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விசாவில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் சொந்த நாட்டிற்குத் திரும்பினால் இந்தத் தொகை முழுமையாகத் திருப்பியளிக்கப்படும்; தவறும் பட்சத்தில் அத்தொகை பறிமுதல் செய்யப்படும்.

இருப்பினும், இந்த விசா பாண்ட் விதியால் இந்தியர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்பதே நிதர்சனம். அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள 50 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இப்பட்டியலில் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளும் சில ஆசிய நாடுகளுமே இடம்பெற்றுள்ளன. எனவே, இந்திய விண்ணப்பதாரர்கள் வழக்கம்போல வழக்கமான விசா கட்டணத்தைச் செலுத்தி, நேர்முகத் தேர்வில் பங்கேற்று விசா பெறலாம். ரூ.17.5 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டிய அவசியம் இந்தியர்களுக்குத் தற்போது முற்றிலும் இல்லை.

   

சுற்றுலா மற்றும் வணிக விசாவில் அமெரிக்காவிற்குள் நுழைபவர்கள், விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாகத் தங்குவதைத் தடுப்பதற்காகவே அமெரிக்க அரசு இந்த நிபந்தனையைக் கொண்டு வந்துள்ளது. இத்தகைய பெரும் தொகையைப் பிணையமாக வைப்பது விசா விதிகளை மீறுவதைக் கணிசமாகக் குறைக்கும் என அமெரிக்கா நம்புகிறது. அதேவேளையில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கும், உண்மையான சுற்றுலாப் பயணிகளுக்கும் இது மிகப்பெரிய நிதிச் சுமையாக அமையும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

   

தற்போதைய சூழலில் இந்தியா இந்த பாண்ட் பட்டியலில் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் இப்பட்டியலை மாற்றியமைக்கும் மற்றும் கூடுதல் நாடுகளைச் சேர்க்கும் முழு அதிகாரம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கே உள்ளது. எனவே, வருங்காலத்தில் இந்தியாவும் இதில் சேர்க்கப்பட்டால் மட்டுமே இந்த டெபாசிட் விதிமுறை பொருந்தும். அதுவரை, இந்தியப் பயணிகள் எவ்விதக் குழப்பமும் இன்றித் தங்களின் வழக்கமான நடைமுறைகளின் படியே அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.