வெறும் ரூ.18,000 சம்பளத்தில் அவ்வளவு ஹாப்பியா இருந்தேன்… ஆனா இன்னைக்கு துபாயில்.. மன வருத்தத்துடன் இந்தியப்பெண் வெளியிட்ட வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 13, 2025

Spread the love

வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி எங்கே உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக துபாயில் வாழும் இந்திய பெண் பகிர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் பெங்களூரில் மாதம் 18 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்த போது தான் உண்மையான மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் இன்று துபாயில் அதிக சம்பளம் பெற்றாலும் அந்த சுகம் இல்லை. நல்ல வேலை, உயர்ந்த சம்பளம் இருந்தும் மனநிறைவு இல்லாத வாழ்க்கை தான் வெளிநாட்டில் இருக்கிறது.

இந்திய தொழில் முனைவோர் சீமா புரோகித் தனது முதல் சம்பளத்தை நினைவுகூர்ந்து, அந்தப் 18000 ரூபாயில் பிஜி வாடகை, ஸ்ட்ரிட் ஷாப்பிங், கேண்டின் உணவு மற்றும் வார இறுதி கிளப் எல்லாம் செய்து முடித்து விடுவேன். அதுமட்டுமல்லாமல் சேமிப்பதற்கும் பணம் இருந்தது. அப்போது நான் உலகிலேயே மிகவும் சந்தோஷமான பெண்ணாக இருந்தேன். வாழ்க்கையில் அதிக சம்பளம், நல்ல வாய்ப்புகள் வேண்டுமென்று ஓட்டத்தில் இறங்கிய பிறகு அந்த அந்த அமைதியே மாறிப் போய்விட்டது என்று மன வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Seema பதிவைப் பகிர்ந்துள்ளார் (@seemapurohit018)