அல்பேனியா நாடு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைச்சரை நியமித்து உலகில் உள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அல்பேனியா நாட்டில் ஊழல் அதிகமாக நடப்பதால் ஊழலை தடுப்பதற்காகவே ஏஐ அமைச்சரை நியமித்து உள்ளதாக பிரதமர் எடி ராமா நேற்று அறிவித்துள்ளார். ஏஐ அமைச்சருக்கு டியெல்லா என்ற பெயர் சூட்டி உள்ளனர்.
1990 இல் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ச்சிக்குப் பிறகு அல்பேனியாவில் ஊழல் மலிந்து காணப்படுகிறது. டியெல்லா ஏஐ அமைச்சர் மக்களுக்கு பெரிய நம்பிக்கையாக இருப்பார் என்றும் 100% ஊழல் இன்றி அல்பேனியா நாட்டை டியெல்லா மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
