மாதம் ரூ.10 லட்சம் வாடகையா? நியூயார்க் இந்தியப் பெண்ணின் வீட்டைப் பார்த்து வாயடைத்துப் போன நெட்டிசன்கள்… இணையத்தை அதிர வைத்த பகீர் தகவல்…!!

By Gayathri on புரட்டாதி 24, 2026

Spread the love

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவர், தனது இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்காக மாதம் 10,000 டாலர்களை வாடகையாகச் செலுத்துவதாகத் தெரிவித்து இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். பிரபல நிதி ஆலோசகரான ஷரன் ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்றின் மூலம் இந்தத் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில், குஷி ஜெயின் என்ற அந்த கன்டென்ட் கிரியேட்டரின் வீட்டைப் பார்வையிட்ட ஷரன் ஹெக்டே, நியூயார்க் நகரின் வாடகை விவரங்களைக் கேட்டறிந்த போது இந்த மலைக்க வைக்கும் உண்மை தெரியவந்துள்ளது.

மன்ஹாட்டனில் உள்ள குடியிருப்புகளுக்கு இதைவிட அதிக வாடகை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், தான் வீட்டைத் தேடியபோது 10,000 டாலருக்குக் குறைவான வாடகையில் அனைத்து வசதிகளும் கொண்ட வீடுகள் கிடைக்கவில்லை என்றும் குஷி ஜெயின் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். வாடகை மற்றும் இதர செலவுகள் எனத் தங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.95 லட்சம் முதல் ரூ.1.14 கோடி வரை செலவாவதாக அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், நியூயார்க்கின் மற்ற பகுதிகளான புரூக்ளின், குயின்ஸ், லாங் ஐலேண்ட் சிட்டி போன்ற இடங்களில் 5,000 முதல் 6,000 டாலர்கள் வாடகையிலும் குடியிருப்புகள் கிடைப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

   

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது மாறுபட்ட கருத்துக்களைப் பதிவிட்டு விவாதங்களை எழுப்பி வருகின்றனர். சிலர் இவ்வளவு வாடகை என்பது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும், அங்கு 5,000 டாலர்களிலேயே சிறப்பான வீடுகள் கிடைக்கும் என்றும் வாதிட்டுள்ளனர். இன்னும் சிலரோ, அமெரிக்காவின் நியூயார்க் நகர வாழ்க்கைச் செலவையும் வாடகையையும் இந்திய ரூபாயுடன் ஒப்பிடுவது தவறானது; அங்கு கிடைக்கும் அதிகப்படியான வருமானத்திற்கு ஏற்றவாறே வாடகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தர்க்கரீதியாகப் பதிலளித்து வருகின்றனர்.