சமீபகாலமாகவே இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் லாட்டரி பரிசை வெல்லும் செய்திகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியருக்கு அதிர்ஷ்டம் அளித்துள்ளது. அபுதாபியில் நடைபெற்ற பிக் டிக்கெட் அதிர்ஷ்ட குலுக்கலில் கேரளாவை சேர்ந்த பிவி ராஜன் என்பவர் 61.37 கோடி லாட்டரி பரிசை வென்றுள்ளார்.
இவர் கடந்த 15 வருடங்களாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார். கடைசியாக இந்த மிகப்பெரிய ஜாக்பாட்டை அவர் பெற்றுள்ளார். இந்த பரிசு தொகையை தான் தனியாக வைத்திருக்கப்போவதில்லை என்றும் தன்னுடைய பதினைந்து சக ஊழியர்களுக்கும் சமமாக பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
