துபாயில் ஆசிய கோப்பை 2025 இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியானது 19.1 ஓவரில் 146 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இந்தநிலையில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும் ,ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையிலிருந்து ஆசிய கோப்பை வாங்குவதற்கு இந்திய அணிகள் மறுத்து விட்டார்கள்.
Suryakumar Yadav recreates Rohit Sharma’s iconic 2024 T20 World Cup celebration after Asia Cup win.🇮🇳🔥 #INDvPAK pic.twitter.com/Y8rJzgNvEX
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) September 28, 2025
இந்திய அணி கோப்பை பெற்று கொள்ளாததால் அந்த நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கிச் சென்றது. இதனையடுத்து இந்திய வீரர்கள் 2024 ஆம் வருடம் டி20 உலக கோப்பையில் கேப்டன் ரோஹித் சர்மா கோப்பையை கொண்டு வந்தது போல சைகை செய்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கம் இல்லாமல் வெற்றியை கொண்டாடினார்கள். மேலும் ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசியக் கோப்பை நாங்கள் வாங்க வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம் விரைவில் கோப்பை இந்தியா கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.
