Karma Is Back: பழிக்கு பழி..! “விமானத்தை வீழ்த்துவது போல சைகை” ஹாரிஸ் ரவூப்க்கு சரியான பதிலடி கொடுத்த பும்ரா… வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on புரட்டாதி 29, 2025

Spread the love

துபாயில் ஆசிய கோப்பை 2025 இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியானது 19.1 ஓவரில் 146 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இந்தநிலையில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும் ,ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான  மோஷின் நக்வி கையிலிருந்து ஆசிய கோப்பை வாங்குவதற்கு இந்திய அணிகள் மறுத்து விட்டார்கள்.

இந்தப்போட்டியின்போது முன்னதாக ஆறு விரல்களை காட்டி விமானத்தை நொறுக்குவது போல சைகையை செய்தார் ஹாரிஸ் ரவூப். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பும்ரா விமானம் விழுவது போல சைகை செய்து  கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காஷ்மீரில் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றார்கள். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7ஆம் தேதி இந்தியா அதிரடி தாக்குதல் செய்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. ஒரே நாள் இரவில் மொத்தம் ஒன்பது தீவிரவாதம் முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது ஆறு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பலமுறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.