“இந்தியாவின் மானம் போகுது” 400 மீட்டர் தூரத்திற்கு ₹18,000 கட்டணம்… வெளிநாட்டு சுற்றுலா பயணியை ஏமாற்றிய இந்திய டாக்சி ஓட்டுநர்..!!

By Soundarya on தை 28, 2026

Spread the love

மும்பையில் தரையிறங்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், விமான நிலையத்திலிருந்து வெறும் 400 மீட்டர் தொலைவில் உள்ள ஹில்டன் (Hilton) ஹோட்டலுக்குச் செல்ல டாக்ஸி ஓட்டுநரிடம் ₹18,000 கொடுத்து ஏமாற்றப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார். நேரடியாகச் செல்லாமல், ஓட்டுநர் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு நபர் அப்பெண்ணைத் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்று அச்சுறுத்திய பின் ஹோட்டலில் இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த விவரங்கள் X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மும்பை காவல்துறை அந்தப் பெண்ணிடம் விவரங்களைக் கேட்டுப் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.