சூப்பர் குட் நியூஸ்..! சர்வதேச விமான நிலையங்களில் இந்திய ரூபாயை வெளிநாட்டு நாணயமாக மாற்றலாம்.. ரிசர்வ் வங்கி அதிரடி..!!

By Soundarya on சித்திரை 3, 2026

Spread the love

சர்வதேச விமான நிலையங்களின் புறப்பாடு (Departure) பகுதியில் அமைந்துள்ள அந்நிய செலாவணி கவுண்ட்டர்களில், இனி வெளிநாடு செல்லும் இந்தியப் பயணிகளும் இந்திய ரூபாயை நேரடியாக வெளிநாட்டு நாணயமாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கான விதிகளில் ரிசர்வ் வங்கி முக்கிய திருத்தங்களைச் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு வரை, இந்தச் சலுகை அல்லது வசதி வெளிநாட்டினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்தியர்கள் தங்களிடம் உள்ள ரூபாயை வெளிநாட்டு நாணயமாக மாற்றுவதில் இருந்த சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்களுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை விமான நிலையத்திலேயே எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

   

இந்த விதிமுறை மாற்றம் இந்தியப் பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. முன்னதாகவே பணத்தை மாற்றி எடுத்துச் செல்லத் தவறியவர்கள் அல்லது அவசரமாக வெளிநாடு செல்பவர்கள், இனி விமான நிலையத்திலேயே இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் வெளிநாடு செல்லும் இந்தியர்களின் பயணம் இனி கூடுதல் சுமையின்றி எளிதாகும்.