ஆடியன்ஸுக்கு மூளை இல்லையா..? IPL களத்தில் ரிஷப் பந்த் – சஞ்சீவ் கோயங்கா இடையே வெடித்த மோதல்… லக்னோ அணி வெளியிட்ட ‘விளக்க’ வீடியோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!

By Soundarya on சித்திரை 3, 2026

Spread the love

லக்னோவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) தோல்வியடைந்த பிறகு, அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரிடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மைதானத்திலேயே இருவரும் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டது போன்ற காணொளி வைரலானதைத் தொடர்ந்து, வீரர்களை உரிமையாளர்கள் நடத்தும் விதம் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, ரிஷப் பந்தின் முகபாவனைகள் அந்தக் காணொளியில் மிகவும் கோபமாக இருந்ததை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த விவகாரத்தில் ஏற்பட்ட பின்னடைவைச் சமாளிக்க, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்வாகம் ‘உண்மைக் கதை’ என்ற பெயரில் மற்றொரு விளக்கக் காணொளியைப் பகிர்ந்தது. அதில் சஞ்சீவ் கோயங்கா, ரிஷப் பந்தைக் கட்டிப்பிடித்து ‘ஹை-ஃபைவ்’ கொடுத்து வாழ்த்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. “கேமராக்கள் காட்டாத வடிகட்டப்படாத உணர்வுகள் இதோ” என்று அந்த அணி நிர்வாகம் குறிப்பிட்ட போதிலும், இணையப் பயனர்கள் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து வருகின்றனர். இரண்டு வீடியோக்களிலும் உள்ள கால மாற்றம் மற்றும் அங்கிருந்தவர்களின் நிலையை வைத்து இது ஒரு ‘டேமேஜ் கண்ட்ரோல்’ முயற்சி என்று அவர்கள் விமர்சிக்கின்றனர்.

   

   

குறிப்பாக, வைரலான முதல் வீடியோவில் வர்ணனையாளர்கள் பேசிக்கொண்டிருப்பதையும், ரசிகர்கள் மைதானத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், அது ஆட்டம் முடிந்த உடனேயே நடந்த நேரடிச் சம்பவம் என்கின்றனர். ஆனால் லக்னோ அணி வெளியிட்ட வீடியோவில் ரிஷப் பந்தின் முகம் தெளிவாகத் தெரியாதவாறு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகத் தோன்றுவதாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த மோதல் விவகாரம் ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பயனர் மேலும், “விளக்கக்காட்சியை முடித்து 30 நிமிடங்கள் ஆன பிறகு… உங்களை நம்பும் அளவுக்கு பார்வையாளர்கள் மூளையற்றவர்கள் என்று நினைக்கிறீர்களா?” என்று குறிப்பிட்டார்.