இந்தியன் ரயில்வேயில் 11,127 லோகோ பைலட் வேலை அறிவிப்பு… மாதம் ரூ.63000 வரை சம்பளம்…. உடனே விண்ணப்பிக்கவும்..!!

By Swetha on வைகாசி 31, 2026

Spread the love

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) நாடு முழுவதும் காலியாக உள்ள 11,127 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பதவிகளுக்கேற்ப 10-ஆம் வகுப்பு, ஐடிஐ (ITI), டிப்ளமோ, டிகிரி அல்லது இன்ஜினியரிங் போன்ற கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு மாதச் சம்பளமாக ₹19,900 முதல் ₹63,200 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்குத் தகுதியான நபர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆர்வம் உள்ளவர்கள் ரயில்வே தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, தேவையான ஆவணங்களுடன் ஜூன் 14, 2026-க்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசுப் பணியில் சேரக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு, குறிப்பாகத் தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்களுக்கு, இதுவொரு மிகச்சிறந்த பொன்னான வாய்ப்பாகும்.