வேடசந்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி, தவேகவின் அமைச்சர் கே.ஏ.எஸ் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவருடன் குஜிலியம்பாறை அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் மற்றும் வேடசந்தூர் ஒன்றிய அவைத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் அதிமுகவிலிருந்து விலகி தவேகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த அதிரடி அரசியல் மாற்றத்தால் திண்டுக்கல் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தவேகவில் ஒரே நேரத்தில் ஐக்கியமாகியுள்ளனர். தற்போதைய சூழலில் தவேகவின் முக்கிய அமைச்சர்களான என்.ஆனந்த், ஆதவ் மற்றும் கே.ஏ.எஸ் ஆகியோர் தீவிர போட்டி போட்டுக்கொண்டு, பிற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தங்கள் கட்சியை நோக்கி ஈர்த்து இணைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
