தேர்வு கிடையாது, 10th பாஸ் போதும்…. தபால் துறையில் 28,000 பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on தை 27, 2026

Spread the love

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள கிராம அஞ்சல் பணியாளர்  இடங்களை நிரப்புவதற்கான 2026-ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, நாடு முழுவதும் மொத்தம் 28,740 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குறிப்பாகத் தமிழகத்தில் மட்டும் 2,009 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கிளை போஸ்ட் மாஸ்டர்  மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ஆகிய பணிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், உள்ளூர் மொழியான தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும், இருப்பினும் அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. இந்தப் பணியிடங்களுக்கு எந்தவிதமான எழுத்துத் தேர்வும் நடத்தப்படாது; மாறாக, பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   

விருப்பமுள்ளவர்கள் indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த பிப்ரவரி 16 கடைசி நாளாகும். விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களின் தகுதிப் பட்டியல் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு, குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் பணிபுரிய விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.