வேகமாக சென்ற கார்…! செங்குத்தான பாறையிலிருந்து கடலில் விழுந்து இந்திய வம்சாவளி மாணவி பலி… துரிதமாகச் செயல்பட்டும் காப்பாற்ற முடியாமல் போன சோகம்…!!

By Devi Ramu on ஆவணி 26, 2026

Spread the love

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ‘யூசி சாண்டா க்ரூஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் 3-ஆம் ஆண்டு படிக்கத் தயாராகி வந்த இந்திய வம்சாவளி மாணவி ஆலி ரெனீ சிங் (19). சாண்டா க்ரூஸ் பகுதியின் ‘ஸ்டீமர் லேன்’ கடற்கரைப் பாறைப் பாதையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தான பாறையிலிருந்து பசிபிக் பெருங்கடலுக்குள் தலைகீழாக விழுந்தது. காரை ஓட்டிச் சென்றவர் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், மாணவி ஆலி ரெனீ சிங் மூழ்கிய காரின் உள்ளேயே மாட்டிக்கொண்டார்.

தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் சாண்டா க்ரூஸ் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் மறைவுக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.