அபுதாபியில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்கு ஒரே இரவில் தலையெழுத்தே மாறியுள்ளது. டிக் சீரிஸ்278, ரூ. 35 கோடி வென்ற இந்தியாவை சேர்ந்த சந்தீப். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி 200669 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார். இன்று அதுவே அவருக்கு அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது. கடந்த மூன்று மாத காலமாகவே சந்தீப் லாட்டரி டிக்கெட்டை வாங்கி வந்துள்ளார்.
பரிசு விழுந்தவுடன் டிக்கெட் தொகுப்பாளர் அவருக்கு போன் செய்து பரிசு விழுந்து உள்ளது என்று கூறியுள்ளார். முதலில் நம்பாத அவர் பிறகு அவருடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இந்த பரிசை பற்றி அவரிடம் கேட்டபோது நான் என்னுடைய சொந்த ஊருக்கே சென்று என்னுடைய தந்தையின் சிகிச்சைக்காக மற்றும் சொந்த தொழில் தொடங்க இந்த பரிசுத் தொகையை பயன்படுத்த உள்ளேன் என்று கூறியுள்ளார்.
