அதிமுகவில் ஒரு தந்திரமான நரி இருக்கு… அது விஜய்யை CM ஆக்க பிளான் போடுது… பரபரப்பை கிளப்பி விட்ட முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி..!!

By Soundarya on புரட்டாதி 8, 2025

Spread the love

அதிமுகவை சீர்குலைத்து வரும் தந்திரமான நரி எப்போது அம்பலமாகும்? அதிமுகவில்  ஜாதி வெறி பிடித்த நரி உள்ளது என்று முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், ” ஜெயலலிதா காலத்தில் ஜாதி வெறியன் என்ற முத்திரை குத்தப்பட்டது. அமைச்சரவை மற்றும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட ஓரம் கட்டப்பட்டது. அந்த நரி ஜெயலலிதா இருக்கும் வரை முகவரி இல்லாமல் இருந்தது. அவருடைய மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்குவேன் கட்சித் தலைவர் ஆக்குகிறேன் என்று கூறி அவரை முன்னிறுத்தி பிளவை உருவாக்கியது. அந்த நரி தான் அதன் மூலமாக தன்னை இரண்டாம் இடத்திற்கு உயர்த்திக் கொண்டது.

கட்சி ஒன்றிணைய முயற்சி எடுத்த போது அந்த நரி முட்டுக்கட்டையாக இருந்தது. ஒரு நாள் அந்த நரியை தோலுரித்த பிறகு சில காலம் முடங்கியது. பிறகு அணிகள் இணைய போகிறது என்று தன்னுடைய சித்து விளையாட்டுக்கள் மூலமாக பல சீனியர்களை பின்னுக்கு தள்ளி மீண்டும் முன்னேறியது. கட்சி வலுவோடு இருக்க வேண்டும் என்று நினைத்த பலரையும் தன்னுடைய சதி திட்டத்தால் பின்னுக்கு தள்ளியது. பழனிசாமியை எம்ஜிஆர் ஜெயலலிதா போல ஆக்கி விடுவேன் என்று உசுப்பேற்றி செங்கோட்டையன் போன்றவர்களை வீழ்த்தி கட்சியின் ஒற்றுமையை தடுத்து மனவலிமை சிதைத்து கொண்டிருக்கிறது.  விஜய் எனும் மாய மானை முன்னிறுத்தி அதிமுக மூலமாக விஜய்யை முதல்வராக்க அந்த நரி முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.