மிக எளிமையான முறையில் நடைபெற்ற கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயரின் திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

By Mahalakshmi on ஆனி 2, 2024

Spread the love

ஐபிஎல் தொடர் மூலமாக இந்தியாவில் பணியில் இடம்பெற்ற கிரிக்கெட் வீரரான வெங்கடேஷ் ஐயருக்கும் ஸ்ருதி ரகுநாதனுக்கும் இன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஐபிஎல் கிரிக்கெட் மூலமாக இந்திய அணியில் இடம் பிடித்தவர் வெங்கடேஷ் ஐயர் இவர் 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றார்.

   

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் கொல்கத்தா அணியில் சிறப்பாக விளையாடி இருந்தார். தனது ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக இந்திய அணியில் இடம் பிடித்தார். பேட்டிங் மட்டும் இல்லாமல் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக விளையாடிய இவர் பல போட்டிகளில் பல விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றார்.

   

 

கடந்த வருடம் வெங்கடேஷ் ஐயருக்கும், ஸ்ருதி ரங்கநாதனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் அடுத்த கட்டமாக தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.