90’s கால கட்டத்தில் தொகுப்பாளராகவும், சின்னத்திரை நடிகராகவும் கலக்கியவர் விஜய் ஆதிராஜ். இவர் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 1-ல், அவரது மனைவி ரஷ்னாவுடன் இணைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார் கடந்த 2013 ஆம் ஆண்டு புத்தகம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடித்தார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு படம் நல்ல வரவேற்பு பெறவில்லை. சின்னத்திரை கைகொடுத்த அளவுக்கு வெள்ளி திரை விஜய் ஆதிராஜுக்கு கை கொடுக்கவில்லை. புத்தகம் படம் தோல்வி அடைந்த இயக்கவில்லை.
இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்திற்கு நொடிக்கு நொடி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் செம்பி பட புகழ் அஸ்வின் குமார், ஷியாம் நரேன் ஆகியோர் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் அம்ரேஷ் இசையமைக்க உள்ளார்.
ஆக்சன் பொழுதுபோக்கு கதை அம்சம் கொண்ட படமாக நொடிக்கு நொடி படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் புதுமுக நடிகை கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்த மாதம் படப்பிடிப்பை தொடங்கி செப்டம்பர் மாதம் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர். நொடிக்கு நொடி படம் குறித்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.