“கழிவறையில் கேமரா, குற்றவாளிகளை போல நடத்தினாங்க” தென் கொரியப் பயணத்தில் இந்தியத் தம்பதிக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவம்… வைரலாகும் பகீர் வீடியோ..!

Spread the love

இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்ஸர் சச்சின் அவஸ்தி மற்றும் அவரது மனைவி தீப்ஷிகா மிஸ்ரா ஆகியோர், தென் கொரியாவின் ஜேஜு தீவிற்குச் சென்றபோது அங்குள்ள அதிகாரிகளால் சுமார் 38 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகுந்த காரணங்கள் ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்ட தங்களை, அதிகாரிகள் குற்றவாளிகளைப் போல நடத்தியதாகவும், சூரிய ஒளி கூட இல்லாத ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்திருந்ததாகவும் சச்சின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். அங்கு அவர்களுக்குப் போதிய உணவோ, நீரோ வழங்கப்படவில்லை என்றும், கழிவறைக்குச் செல்லும் போது கூட காவல்துறையினர் பாடிகேமராவுடன் பின்தொடர்ந்து கண்காணித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சோதனையான காலத்தில் அவர்கள் நாடு திரும்ப விரும்பியபோது, சாதாரண விலையை விட 10 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். சீனா வழியாகத் திரும்பும் பயணத்தின் போதும் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். தனது இந்த அனுபவம் அனுதாபத்திற்காக அல்ல, மாறாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள் அங்குள்ள எதார்த்த நிலைமைகளை உணர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே பகிர்வதாக சச்சின் அவஸ்தி கூறியுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

6 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

7 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

7 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

8 மணத்தியாலங்கள் ago