நேற்று ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த அமீரகம் 13.1 ஓவரில் 57 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனார்கள். பின்பு களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவரில் 60 ரன்கள் மற்றும் 9 விக்கெட் வித்தியாசத்தில் வரலாறு வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த செயல் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. 13 வது ஓவரில் தூபே பந்து வீச ஓடி வரும்போது இடுப்பில் வைத்திருந்த துண்டு கீழே விழுந்தது. தூபே அதை கவனிக்காமல் பந்தை வீசினார் அமீரக வீரர் ஜூனைத் சித்திக் அடிக்க முயற்சித்தார்.
பந்து சஞ்சு சாம்சனின் கைக்குச் சென்றது. சித்திக் துண்டு கீழே விழுந்து விட்டது என்று தூபேவிடம் கூறினார். அப்போது கவனக்குறைவால் கிரீசை விட்டு சற்று வெளியே நின்றார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன் பந்து எரிந்து அவுட் செய்தார். ரீப்ளே செய்த மூன்றாவது நடுவரும் அவுட் என்று தெரிவித்தார். இந்திய கேப்டன் சூர்யகுமார் உண்மையான விளையாட்டுக்கு இது புறம்பாக உள்ளதாக கூறி மேலும் ஜூனை சித்தி விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தினார். அதே ஓவரிலேயே கேட்ச் அவுட் ஆகி போனார் ஜூனை.
Third umpire gave it OUT, but SKY withdrew his appeal. Pure class! 🌟
Nice gesture from #SuryaKumarYadav👍 he shows his gaming spirit❤️🫰#INDvsUAE#AsiaCup pic.twitter.com/OA8SdSmRU7— Aswinkumar_TVK (@Aswinkumar_TVK) September 10, 2025
