ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ராணுவ வீரர்களுக்கு உதவிய இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பஞ்சாபில் ஃபெரோஸ்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஷ்ரவானின் கல்விச்செலவை ராணுவத்தின் Golden Arrow Division ஏற்றுக்கொள்ளும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள் . பத்து வயது உடைய இந்த சிறுவன் தன்னுடைய ஊரில் போர்க்கால சூழ்நிலைகளை கண்டதால் தான் வளர்ந்து இந்திய ராணுவத்தில் சேர விரும்புவதாக கூறியுள்ளார். அவருடைய இளம் வயது மற்றும் எல்லைகளில் கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும் எதுவுமே அவரை தடுக்கவில்லை.
தன்னுடைய குடும்பத்தின் விவசாய நிலத்தில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு போர்க்காலத்தில் ஐஸ், பால், தண்ணீர் மற்றும் லஸ்ஸி ஆகியவற்றை வழங்கியுள்ளார். போர்க்காலத்தில் பலரும் பயந்து போனபோது இந்த சிறுவன் மட்டும் ஒவ்வொரு நாளும் அவர்களிடம் ஓடி சென்று அவர்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை வீரர்களுக்கு நினைவூட்டியுள்ளார். மேலும் இது குறித்த அவர் கூறுகையில், “நான் பயப்படவில்லை நான் பெரியவன் ஆனதும் ஒரு ராணுவ வீரராக வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் என்னை மிகவும் நேசித்தார்கள்” என்று கூறியுள்ளார். இந்த சிறுவனின் சேவையால் கவரப்பட்ட இந்திய ராணுவம் அவரை கௌரவித்துள்ளது.
