2025 ஆம் வருடத்திற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 3935 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அனைத்து மாவட்டங்களிலும் 4922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு வினாத்தாள் வினியோகம் செய்யப்பட்டு தேர்வு நடைபெற்றது. டிஎன்பிசி தேர்வு நடைபெற்று முடிந்த இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில் தேர்வுக்கான விடை குறிப்பை டிஎன்பிஎஸ் சி வெளியிட்டுள்ளது .
இந்த நிலையில் சேலத்தில் குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டிஎன்பிசி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு ட்டிரங் பட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் தவிர்த்து மற்ற ஆவணங்கள் மட்டுமே அட்டை பெட்டியில் வைக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.
