#BIG BREAKING: அசாமில் விழுந்து நொறுங்கிய இந்திய போர் விமானம்.. 2 வீரர்கள் பரிதாப பலி…!

By Nanthini on பங்குனி 6, 2026

Spread the love

அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் விமான தளத்திலிருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய் சு-30 எம்.கே.ஐ (Su-30 MKI) ரக போர் விமானம் ஒன்று கடந்த மார்ச் 5-ஆம் தேதி மாலை வழக்கமான பயிற்சியின் போது புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டதாக இரவு 7:42 மணியளவில் விமானப்படை தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த போர் விமானத்தைத் தேடும் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்தத் தேடுதல் வேட்டையில், அசாமின் அங்லாங் பகுதியில் அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கிக் கிடப்பது கண்டறியப்பட்டது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஸ்குவாட்ரான் தலைவர் அனுஜ் மற்றும் லெப்டினன்ட் பர்வேஷ் துராக்கர் ஆகிய இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. தேசப்பணியில் ஈடுபட்டிருந்த இரு வீரர்களின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.