பிரபல இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்த வேலைகளில் பட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற சென்னை ஐபிஎல் போட்டியில் கமலும், இயக்குனர் சங்கரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்தியன் 2 ப்ரோமோஷனுக்காக பங்கேற்றனர். வருகிற ஜூலை மாதம் 12ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்தியன் 2 படத்தில் இருந்து முதல் பாடல் குறித்த ப்ரோமோ நேற்று வெளியானது. இன்று மாலை 5 மணிக்கு பாடல் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியன் 2 படத்தின் பாரா என்ற பாடல் ரிலீஸ் ஆனது. பாடலைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
