இந்தியா போட்ட அதிரடி முட்டுக்கட்டை…! ரஷ்யாவிற்கு செக் வைத்த டிரம்ப்…! கச்சா எண்ணெய் வருமானத்தில் 46% வீழ்ச்சி…!!

By Devi Ramu on தை 24, 2026

Spread the love

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகள் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் முக்கிய வருமான ஆதாரமான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முடக்க, அந்நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த நெருக்கடி காரணமாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இல்லாத அளவிற்கு நாளொன்றுக்கு 3.16 மில்லியன் பேரல்களாகச் சரிந்துள்ளது.

ரஷ்யாவின் மிக முக்கியமான வாடிக்கையாளராக இருந்த இந்தியாவும் தற்போது அங்குள்ள இறக்குமதியைக் கணிசமாகக் குறைத்துள்ளது புதினுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, வரும் ஜனவரி மாதத்தில் ரஷ்யாவின் எரிசக்தித் துறை வருவாய் சுமார் 46 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் எனப் பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாடுகளின் வர்த்தகத் தடைகள் மற்றும் அமெரிக்காவின் தொடர் மிரட்டல்களால் ரஷ்யா தனது கச்சா எண்ணெயைச் சந்தைப்படுத்துவதில் பெரும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.