இந்தியாவின் $120 பில்லியன் கனவை ஒரே போடாய் போட்ட சீனா… இந்தியர்களுக்கு வரப்போகும் பெரும் ஆபத்து… ஷாக் நியூஸ்….!

By Nanthini on வைகாசி 26, 2026

Spread the love

சர்வதேச சப்ளை செயினில் (Supply Chain) தன்னை ஒரு முன்னணி உற்பத்தி மையமாக மாற்ற இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவிற்கு மாற்றாக உலக நாடுகள் இந்தியாவை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையர்கள் இந்தியாவில் தங்கள் ஆலைகளை விரிவாக்கம் செய்தது, செமிகண்டக்டர் திட்டங்கள் மற்றும் புதிய தொழில் பூங்காக்கள் இதற்குச் சான்றுகளாக உள்ளன. இதன் விளைவாக, இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி கடந்த 2015-ல் $8.6 பில்லியன் டாலராக இருந்தது, 2025-ல் $47 பில்லியன் டாலராக அசுர வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு 2026-ம் ஆண்டு இறுதிக்குள் இதனை $120 பில்லியன் டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியா உற்பத்தியில் அசுர பாய்ச்சலை நிகழ்த்த நினைக்கும் அதே வேளையில், அதற்குத் தேவையான மூலப்பொருட்களின் சப்ளை செயினை சீனா தனது புதிய கட்டுப்பாடுகள் மூலம் முழுமையாக லாக் செய்துள்ளது இந்தியத் தொழில்துறையினரிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன அரசு அண்மையில் பிறப்பித்துள்ள புதிய ஸ்டேட் கவுன்சில் ஆணைகள் மூலமாக, அத்தியாவசிய இயந்திரங்கள் மற்றும் உதிரிப் பாகங்களின் ஏற்றுமதிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், சீனாவை நம்பியிருக்கும் இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளின் விரிவாக்கத் திட்டங்கள் பெருமளவில் தள்ளிப்போகும் அபாயம் எழுந்துள்ளது. நவீன கார்களில் ஆயிரக்கணக்கான சிப்கள் பயன்படுத்தப்படும் சூழலில், இந்த முடக்கம் கார் உற்பத்திச் செலவை உயர்த்தி, புதிய மாடல்களின் வருகையைத் தாமதப்படுத்தும்.

   

சீனாவின் இந்த புதிய உத்தரவு வெறும் வர்த்தக உத்தி அல்ல, மாறாக தங்களின் உற்பத்தியைச் சீனாவிற்கு வெளியே மாற்ற நினைக்கும் நிறுவனங்களையும் அதன் அதிகாரிகளையும் தனிப்பட்ட முறையில் தண்டிக்கும் ஒரு மிரட்டல் உத்தியாகும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்டோ உதிரிப்பாகங்கள் இறக்குமதியில் 26 சதவீதம் சீனாவிலிருந்து மட்டுமே வந்துள்ளதால் இந்த பாதிப்பு அதிகம். ஏற்கனவே ஈரான் போர் காரணமாக எழுந்துள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டில் விவசாயத்தை அச்சுறுத்தும் ‘எல் நினோ’ விளைவு என இந்தியா பலமுனை நெருக்கடிகளைச் சந்தித்து வரும் இந்த இக்கட்டான நேரத்தில், செமிகண்டக்டர்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தாதுக்கள் மற்றும் அட்வான்ஸ் தொழில்நுட்ப ஏற்றுமதியைச் சீனா முடக்கியிருப்பது இந்திய நிறுவனங்களுக்குப் பெருத்த பின்னடைவாகும்.

   

சீனாவின் இந்தப் பொருளாதாரச் செக்கிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், குறிப்பிட்ட சில நாடுகளை மட்டுமே சார்ந்து வாழும் நிலையை மாற்ற மத்திய அரசு புதிய முதலீட்டுத் திட்டங்களைத் தயார் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் உள்கட்டமைப்பைப் பலப்படுத்த ₹33,660 கோடி மதிப்பிலான ‘பாரத் உத்யோகிக் விகாஸ் யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 50 புதிய தொழில் பூங்காக்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியா வெறும் அசெம்பிளி (Assembly) செய்யும் நாடாக மட்டும் சுருங்கிவிடாமல், சொந்தமாக உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நீண்டகாலத் தொழில்நுட்பத் திறனை உள்நாட்டிலேயே வளர்த்தெடுப்பதே இந்த சவாலை முறியடிப்பதற்கான ஒரே வழியாகும்.