உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞரான நரேந்திர குமார், கடுமையான உடல் எடை இழப்பு, தீராத வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் கடந்த 18 ஆண்டுகளாக ஒரு அரிய ஒட்டுண்ணி இரட்டை (Parasitic Twin) வளர்ந்து வந்ததைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
தாயின் கர்ப்பக் காலத்தின் ஆரம்பத்திலேயே அந்த இரட்டைக் கரு முழுமையாக வளராமல், மற்றொரு குழந்தையின் உடலுக்குள் உறிஞ்சப்பட்டதால் இந்த அரிய நிலை ஏற்பட்டுள்ளது. ‘கருவில் உள்ள கரு’ (Fetus in fetu) என்று அழைக்கப்படும் இந்த மருத்துவ நிலையில், முழுமையாக வளராத இரட்டை குழந்தை, மற்றொரு குழந்தையின் உடலுக்குள் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வந்துள்ளது.
நரேந்திர குமாரின் உடலுக்குள் இருந்த அந்த ஒட்டுண்ணி இரட்டை சுமார் 2.5 கிலோ எடை கொண்டதாக இருந்ததுடன், அதில் முடி, பற்கள் மற்றும் எலும்புகளும் காணப்பட்டன. இளைஞரின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த இந்த அரிய இரட்டைக் கருவை, மருத்துவர்கள் அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றிலிருந்து வெற்றிகரமாக அகற்றினர்.
