திக்.. திக்..! சினிமாவை மிஞ்சிய திருட்டு… நொண்டி நொண்டி வந்த மர்ம நபர்… ரூ.50 லட்சம் கார் மாயம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி…!!

By Gayathri on ஐப்பசி 25, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரான பியூஷ் ஜெய்ஸ்வாலின் விலையுயர்ந்த சொகுசு வாகனம் நள்ளிரவில் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, தலையில் முண்டாசு கட்டிய மர்ம நபர் ஒருவர் கால் ஊனமுற்றவர் போல பாசாங்கு செய்து வந்துள்ளார். பின்னர் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி, ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் வாகனத்தின் பூட்டை உடைத்து மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சமீபத்தில் தனது வாகனத்தை ஓட்டுவதற்காகப் பணியில் சேர்ந்த மாயா சங்கர் என்பவர், சில தினங்களிலேயே வேலையை விட்டு விலகி வெளியூர் செல்வதாகக் கூறிச் சென்றதால், இந்தச் சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் என உரிமையாளர் சந்தேகம் எழுப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் பேரில், சிவில் லைன்ஸ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கேமரா பதிவுகள் மற்றும் பழைய ஓட்டுநரின் பின்னணியை மையமாகக் கொண்டு தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.