ஐயோ கொடுமையே… 10-ஆம் வகுப்பு மாணவிக்கு காவலர் நேர்ந்த கொடூரம்… திருமணம் செய்வதாகக் கூறி ஆபாச படம் எடுத்து மிரட்டல்… உ . பி – யில் நடந்த பகீர் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 25, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம், காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள காமர் காவல் நிலையத்தில் பணியாற்றும் மோகித் யாதவ் என்ற காவலர் மீது 10-ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதுடன், தன்னை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ஆபாசப் படங்களை எடுத்துக்கொண்டு, பின்னர் அவற்றை வைத்து மிரட்டியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாணவி வெளியிட்டுள்ள வேதனையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இந்தத் தொல்லையால் தனது வாழ்க்கையே சீரழிந்துவிட்டதாகவும், குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்காததால் மன உளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றுவதாகவும் அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

   

இந்தச் சம்பவம் குறித்து ஊரக காவல் கண்காணிப்பாளர் அதுல் குமார் சோங்கார் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர் காவலர் தப்பியோட முயல்வதாகத் தகவல்கள் பரவிவரும் நிலையில், புகாரின் உண்மைத் தன்மையை முழுமையாக ஆராய்ந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.