ஷங்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். படம் இயக்குவது மட்டுமல்லாமல் எஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ஷங்கர். 1993 ஆம் ஆண்டு “ஜென்டில்மேன்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஷங்கர். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் பல வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமானார் ஷங்கர். 2000 காலகட்டத்திற்கு பிறகு பாய்ஸ், அந்நியன், எந்திரன், எந்திரன் 2.0, நண்பன் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். ஷங்கர் படங்கள் என்றாலே வெற்றி தான் என்ற அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றார் ஷங்கர்.
சமீபத்தில் கமலஹாசனை வைத்து இவர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் அவ்வளவாக பேசப்படவில்லை. அதை தொடர்ந்து தெலுங்கில் ராம்சரனை வைத்து Game Changer என்ற படத்தை இயக்கி அது வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படம் பல மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் சங்கர் செய்த ஒற்றை தவறினால் தயாரிப்பாளர் அப்செட்டில் இருக்கிறார்கள். அது என்னவென்று இனி காண்போம்.
சங்கருக்கு எப்போதுமே பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் உண்டு. அதற்கு காரணம் இவர் தான் இயக்கும் படங்களில் வரும் பாடல்களை மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக செட்டு போட்டு எடுக்கக் கூடியவர். அப்படி கேம் சேஞ்சர் படத்தின் ஒரு பாடலுக்காக வெளிநாடுகளுக்கு சென்று பல கோடி ரூபாய் செலவழித்து செட்டெல்லாம் போட்டு ஒரு பாடலை எடுத்தாராம் சங்கர். ஆனால் அந்தப் பாட்டு கடைசியில் படம் ரிலீஸ் ஆன பிறகு அதில் வரவே இல்லை. எடிட்டிங் இல் தூக்கி விட்டார்கள். இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சிறிது அப்சட்டில் இருக்கிறாராம். தேவையில்லாமல் இந்த மாதிரி கட் செய்து போவதனால் பண விரயம் ஆகிவிட்டது படத்தில் வராத ஒரு பாட்டுக்காக எத்தனையோ கோடி செலவழித்து விட்டோமே என்று தலையில் கை வைத்தபடி இருக்கிறாராம்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…