“நண்பா… இனிமே நம்ம ரேஞ்சே வேற” டாஸ்மாக்கில் களமிறங்கும் 54 புது ‘சரக்குகள்’… கொண்டாட்டத்தில் குடிமகன்கள்… அரசு செய்யப்போகும் அந்த ‘மாஸ்’ பிளான்…!

By Visaka on ஆடி 17, 2026

Spread the love

தமிழகத்தில் மதுப்பிரியர்களை கவரும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியான மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போதைய நவீன காலகட்டத்திற்கு ஏற்ப எலைட் கடைகள், தனியார் ரெஸ்டோ பார்கள் போன்ற வசதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது டாஸ்மாக் நிர்வாகமே நேரடியாக ரெஸ்டோ பார்களை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள வழக்கமான டாஸ்மாக் பார்களின் எண்ணிக்கையைக் குறைத்து, தரமான ரெஸ்டோ பார்களாக மாற்றும் முடிவுகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் கிடைக்கும் சில பிரபல பிராண்டுகள் தமிழகத்தில் கிடைப்பதில்லை என்ற குறை மதுப்பிரியர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், தமிழக அரசு தற்போது புதிய மதுபான நிறுவனங்களிடம் இருந்து மதுவகைகளை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, மேலும் 54 புதிய நிறுவனங்களின் பீர், பிராந்தி, விஸ்கி மற்றும் ரம் போன்ற மதுவகைகளை தமிழக டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

   

முக்கியமாக, தற்போதைய மதுப்பிரியர்கள் பிரீமியம் ரக மதுபானங்களை அதிகமாக விரும்பி கேட்பதால், அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு இந்த 54 புதிய வகை சரக்குகள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன. தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 100 கோடி ரூபாயும், பண்டிகை காலங்களில் 300 கோடி ரூபாய் வரையிலும் டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்து வரும் நிலையில், இந்த புதிய பிராண்டுகளின் வரவு விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்களுக்குப் பிடித்தமான அண்டை மாநில பிராண்டுகள் இனி தமிழகத்திலேயே கிடைக்கப்போவதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.