Connect with us

பெண் வீட்டுக்கு மகன்களை வாழ அனுப்பும் வித்தியாசமான கிராமம்.. இதற்க்கு அவர்கள் சொல்லும் காரணம்..?

HISTORY

பெண் வீட்டுக்கு மகன்களை வாழ அனுப்பும் வித்தியாசமான கிராமம்.. இதற்க்கு அவர்கள் சொல்லும் காரணம்..?

 

பொதுவாக திருமணம் முடிந்தால் மணப்பெண் மணமகன் வீட்டுக்கு செல்வதுதான் வழக்கம். ஒரு சில வீட்டில் மட்டும்தான் வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டு திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் இங்கு ஒரு ஊரில் அதாவது 16 கிராமங்களில் திருமணம் முடிந்த பிறகு பெண் வீட்டுக்கு மாப்பிள்ளையை வாழ அனுப்பி வைக்கும் வித்தியாசமான பழக்கம் நடைமுறையில் இருக்கின்றது. அதைப்பற்றி தான் இதில் நாம் பார்க்க போகிறோம்.

   

பெண்களுக்கு அதிக உரிமை கொடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் நன்குடி வேளாளர் சமூகத்தில் இந்த பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகளை, தட்டப்பாறை, ஏரல், பாண்டியாபுரம், சொக்கலிங்கபுரம், ராமச்சந்திராபுரம், கூட்டுடன்காடு, செக்காரக்குடி, புதூர் உள்ளிட்ட 16 ஊர்களில் நன்குடி வேளாளர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் சடங்குகள் மற்றும் சம்பிரதாயம் சற்று வித்தியாசமாக இருக்கின்றது. அவர்கள் அனைவரும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த சமூகத்தில் பெண் பிள்ளையைப் பெற்றவர்கள் தங்கள் வாழ்நாளில் இறுதிவரை மகளுடன் தான் இருப்பார்கள். மகன்களை பெற்றவர்கள் தான் மருமகள் வீட்டுக்கு மகன்களை அனுப்பி வைக்கிறார்கள்.

சொத்துரிமை , பெண்ணுரிமை பற்றி இன்றி நாம் பெரிய அளவு பேசுகிறோம். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதனை நடைமுறைப்படுத்தியது இந்த கிராமம். மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்டு செல்வதை அறிந்திருப்போம். ஆனால் இங்கு பெண் வீட்டார் மாப்பிள்ளை கேட்டு செல்வார்களாம். வீட்டோட மாப்பிள்ளை என்பதை கேலி செய்யும் காலத்தில் காலம் காலமாக பழக்கமாக இதனை வைத்திருக்கிறார்கள் நன்குடி வேளாளர் சமூக மக்கள்.

பெண் வீட்டுக்கு வரும் மருமகன்கள் தங்கள் மாமனார், மாமியாரை பெற்றோர் போல் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதும்,  சொத்து வரி, நீர் வரி உட்பட எதுவாகினும் பெண்கள் பெயரில் தான் இருக்க வேண்டும் என்பது ஆண்டாண்டு காலமாகக அங்கு நடைமுறையில் இருக்கின்றதாம்.

மொத்தத்தில் பெண் என்பவர் கணவர் வீட்டு அடிமை என்பதை மாற்றி கணவர்கள் பெண்கள் வீட்டில் வந்து வசிக்கும் இந்த பாரம்பரிய பழக்கத்தை பல வருடங்களாக பின்பற்றி வருகிறார்கள் இந்த சமூகத்தினர். இது கேட்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது. ஆனால் அங்கு இருக்கும் மக்கள் இதனை பல வருடங்களாக பின்பற்றி வருவதாக கூறுகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top