“அவர் அங்கே… இவர் இங்கே”… 52 வயதில் 2வது திருமணம் செய்த மாஜி மனைவியால் உச்சகட்ட பரபரப்பு….. லண்டனில் நடந்த ரகசிய திருமணம்….!

By Nanthini on புரட்டாதி 16, 2026

Spread the love

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தற்போது ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர் கடுமையான இன்னல்களையும் துன்புறுத்தல்களையும் சந்தித்து வருவதாக அவருடைய ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மேலும், அவர் குறித்து அவ்வப்போது வெளிவரும் வதந்திகள் அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான மற்றொரு செய்தியும் தற்போது கவனம் பெற்றுள்ளது.

இம்ரான் கான் கடந்த 1995-ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரான ஜெமிமா கோல்ட்ஸ்மித் என்பவரைத் திருமணம் செய்தார். இந்தத் தம்பதியினருக்கு சுலைமான், காசிம் என இரண்டு மகன்கள் உள்ளனர். பின்னர் 2004-ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்ற நிலையில், இம்ரான் கான் அடுத்தடுத்து ரேஹம் கான் மற்றும் புஷ்ரா பீபி ஆகியோரைத் திருமணம் செய்துகொண்டார். இதில் தற்போது 3-வது மனைவியான புஷ்ரா பீபியும் இம்ரான் கானுடன் சிறையிலேயே தண்டனை அனுபவித்து வருகிறார்.

   

இதற்கிடையே லண்டனில் வசித்து வரும் இம்ரான் கானின் முதல் மனைவியான 52 வயது ஜெமிமா கோல்ட்ஸ்மித், சிறையில் இருக்கும் இம்ரான் கானின் நிலை குறித்தும், பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கை குறித்தும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வந்தார். இந்த நிலையில், அவர் அயர்லாந்தைச் சேர்ந்த 62 வயதான தொழிலதிபரும் நிதியாளருமான கேமரூன் ஓ ரெய்லி என்பவரைத் தற்போது கரம்பிடித்துள்ளார். திரைப்படத் துறை சார்ந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்து, இந்த இரண்டாவது திருமணத்தில் முடிந்துள்ளது.

   

இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் லண்டனில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் திருமண நிகழ்வு குறித்து ஜெமிமாவின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, ஜெமிமாவின் சகோதரர் பென்னின் மனைவியான ஜெமிமா ஜோன்ஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து, இந்த நாள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அமைந்ததாகப் பதிவிட்டுள்ளார்.