தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பண்டிகை காலங்களிலும் மக்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகின்றன. இதனால் பலரும் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலும் அண்மையில் திருமணம் செய்தவர்களே.
அவர்கள் செய்யும் தவறு என்னவென்றால் முந்தைய ரேஷன் கார்டுகளில் இருக்கும் பெயரை நீக்குவதில்லை. கணவன், மனைவி இருவரும் தங்களது பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து தங்களுடைய பெயர்களை நீக்கிய பிறகு விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், சரியான முகவரியை கொடுக்க வேண்டும்.
